1. [QS]நீர் என் தாயிடம் பால் குடித்த என் இளைய சகோதரனைப்போன்று [QE][QS]இருந்தால் [QE][QS2]நான் உம்மை வெளியில் சந்திக்கும்போது உம்மை முத்தமிட முடியும். [QE][QS2]இதனைத் தவறு என்று எவரும் சொல்லமாட்டார்கள். [QE]
2. [QS]நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். [QE][QS2]என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன். [QE][QS]நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன். [QE][QS2]கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன். [QE]
3. {#1அவள் பெண்களிடம் பேசுகிறாள் } [QS]அவரது இடதுகை என் தலைக்குக்கீழ் இருக்கும். [QE][QS2]அவரது வலதுகை என்னை அணைத்துக்கொள்ளும். [QE][PBR]
4. [QS]எருசலேம் பெண்களே! வாக்குறுதி கொடுங்கள். [QE][QS2]நான் தயாராகும்வரை என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பவேண்டாம். [QE]
5. {#1எருசலேம் பெண்கள் பேசுகிறார்கள் } [QS]இந்த பெண் யார்? [QE][QS2]தன் நேசரின்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிறாள். [QE]{#1அவள் அவனிடம் பேசுகிறாள் } [QS]கிச்சிலி மரத்தடியில் உம்மை எழுப்பினேன். [QE][QS2]அங்கே உம்மை உமது தாய் பெற்றாள். [QE][QS2]அங்கே உம் தாய் உம்மை துன்பப்பட்டுப் பெற்றாள். [QE]
6. [QS]என்னை உமதருகில் வைத்துக்கொள்ளும். [QE][QS2]உம் இதயத்தின்மேல் ஒரு முத்திரையைப்போல் கையில் அணிந்துகொள்ளும். [QE][QS]நேசமானது மரணத்தைப்போன்று வலிமையானது. [QE][QS2]நேச ஆசையானது கல்லறையைப்போன்று வலிமையானது. [QE][QS]அதன் பொறிகள் சுவாலை ஆகின்றன. [QE][QS2]பின் அது பெரிய நெருப்பாக வளர்கின்றது. [QE]
7. [QS]ஒரு வெள்ளம் அன்பை அழிக்க முடியாது. [QE][QS2]ஒரு ஆறு அன்பை இழுத்துச் செல்லமுடியாது. [QE][QS]ஒருவன் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அன்பிற்காகக் கொடுத்துவிட்டால் [QE][QS2]ஜனங்கள் அவனை இழிவாகவோ அல்லது மட்டமாகவோ கருதுவார்களா? [QE]
8. {#1அவளது சகோதரர்கள் பேசுகிறார்கள் } [QS]எங்களுக்கு ஒரு சிறிய சகோதரி இருக்கிறாள் [QE][QS2]அவளது மார்பகங்கள் இன்னும் வளரவில்லை. [QE][QS]ஒருவன் அவளை மணக்க வரும்போது [QE][QS2]எங்கள் சகோதரிக்காக நாங்கள் என்ன செய்வோம்? [QE][PBR]
9. [QS]அவள் ஒரு மதில் சுவராக இருந்தால் [QE][QS2]நாங்கள் அதைச்சுற்றி வெள்ளிக் கோட்டையைக் கட்டுவோம். [QE][QS]அவள் ஒரு கதவாக இருந்தால் [QE][QS2]அவளைச் சுற்றி கேதுருமரப் பலகைகளை இணைப்போம். [QE]
10. {#1அவள் சகோதரர்களுக்குப் பதில் கூறுகிறாள் } [QS]நான் ஒரு சுவர். [QE][QS2]எனது மார்பகங்களே என்னுடைய கோபுரங்கள். [QE][QS2]அவர் என்னில் திருப்தி அடைகிறார். [QE]
11. {#1அவன் பேசுகிறான் } [QS]சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. [QE][QS2]அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான். [QE][QS]ஒவ்வொருவரும் [QE][QS2]1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான். [QE]
12. [QS]சாலொமோனே, நீர் உமது 1,000 வெள்ளி காசுகளையும் வைத்துக்கொள்ளலாம். [QE][QS2]ஒவ்வொரு வனுக்கும் அவன் கொண்டுவந்த திராட்சைகளுக்காக 200 வெள்ளிகள் கொடும். [QE][QS2]ஆனால் எனது சொந்தத் திராட்சைத் தோட்டத்தை நானே கவனித்துக்கொள்வேன். [QE]
13. {#1அவன் அவளிடம் பேசுகிறான் } [QS]தோட்டத்தில் அமர்ந்திருக்கிறவளே, [QE][QS2]உன் குரலை நண்பர்கள் கேட்கின்றார்கள் [QE][QS2]நானும் அதைக் கேட்கவிடு. [QE]
14. {#1அவள் அவனிடம் பேசுகிறாள் } [QS]என் நேசரே வேகமாக வாரும். [QE][QS2]மணப் பொருட்கள் நிறைந்த மலைகளின்மேல் திரியும் வெளிமானைப்போலவும், [QE][QS2]மரைகளின் குட்டிகளைப்போலவும் இரும். [QE]